• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு - அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு - அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

Vijay Sethupathi

Vijay Sethupathi

விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்

  • Share this:
நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளது பரபரப்பையும், சர்ச்சையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதித்து பேசியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி அவரை எட்டி மிதிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் மோதல்:

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்றிருந்த போது பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சென்ற அவரின் உதவியாளர், அங்கிருந்த ஒருவரால் எட்டி மிதிக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அந்த நபருக்கும், நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது.

Also read:    பதவி பறிபோனால் போகட்டும்… மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..

முத்துராமலிங்க தேவருக்கு அவமதிப்பு என புகார்:

இந்நிலையில், விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த நபர், தான் ஒரு தமிழர் எனவும், அன்றைய தினம் விஜய் சேதுபதியுடன் பேசியபோது அவர் இந்தியாவுக்கு எதிராக தாய்நாட்டை விமர்சித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக பேசியதாலும் நான் கண்டித்த போது விஜய் சேதுபதி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும், என்னை தாக்கியதால் தான் நான் அவர்களை பதிலுக்கு எட்டி உதைத்ததாகவும் வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்து யூடியூப் சேனல்களுக்கு விஜய் சேதுபதியின் உதவியாளரை தாக்கிய நபர் விளக்கம் அளித்தார்.

எட்டி உதைத்தால் பரிசு:

இந்நிலையில் முத்துராமலிங்க தேவரை விமர்சித்த விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருக்கிறார்.



இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது,

Also read:   வாழ்க்கைமுறை நோய்களை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க கேரள அரசு சூப்பர் திட்டம்!

அக்கட்சி வெளியிட்டுள்ள மேலும் ஒரு பதிவில், இது வரை விஜய் சேதுபதி எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியை எட்டி மிதிப்பவர்களுக்கு பரிசு என அர்ஜூன் சம்பத் அறிவித்திருப்பதால் அவரை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: