தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்துக்கள் அனைவரும் இந்த தீபாவளி பண்டிகை முதல் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம். நலிவடைந்து வரும் இந்து வியாபாரிகளை ஊக்குவிப்போம். அந்நிய பொருட்களைத் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. உத்தமபாளையம் வடக்குத் தெரு, தேரடி, மெயின் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கக்கூடிய உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டனர். மேலும் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக உத்தமபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வா என்பவர் மீது உத்தமபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வாவிடம் கேட்டபோது, இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு சுவரொட்டி ஒட்டப்பட்டன. காவல்துறையினர் அகற்றியதால் அடுத்ததாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Munnani, Theni