முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காணிக்கை உண்டியலுக்கு மட்டுமா? அர்ச்சகருக்கு இல்லையா? அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

காணிக்கை உண்டியலுக்கு மட்டுமா? அர்ச்சகருக்கு இல்லையா? அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

உண்டியல்

உண்டியல்

குறைந்த ஊதியத்திலும், ஊதியம் இல்லாமலும் இறைபணி செய்து வரும் பெரும்பாலான அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் வாழ்க்கை தீபாராதனை தட்டில் வரும் காணிக்கைகளை வைத்தே நடக்கிறது என சுட்டிக்காட்டி அறிக்கை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அர்ச்சகர்கள் தட்டில் காசு போடக்கூடாது எனவும், உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்தவேண்டும் எனவும் வாய்மொழியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தெரிவித்து உள்ளனர். தமிழக கோவில்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை மிகமிக குறைந்த தொகையையே ஊதியமாக வழங்கி வருகிறது.

சிலகோவில்களில் அவர்களுக்கு ஊதியமே வழங்கப்படுவது இல்லை. இவ்வாறாக குறைந்த ஊதியத்திலும், ஊதியம் இல்லாமலும் இறைபணி செய்து வரும் பெரும்பாலான அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் வாழ்க்கை தீபாராதனை தட்டில் வரும் காணிக்கைகளை வைத்தே நடக்கிறது என்பது வேதனையான உண்மை. இவ்வாறான சூழ்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தீபாராதனை தட்டில் செலுத்தும் காணிக்கைகளை உண்டியலில் போட சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை இது போன்ற உத்தரவுகள் வழங்கி இருந்தால் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


First published:

Tags: Hindu, Hindu Munnani, HRNC