திமுக ஆட்சிக்கு பின் இந்துசமய அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்படுகிறது - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், அறிவித்த சில நாட்களிலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்துசமய அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  அப்போது பேசிய முதலமைச்சர், அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், அறிவித்த சில நாட்களிலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றது முதல் அத்துறை சிறப்பாக செயல்படுகிறது எனவும் அவரை சேகர்பாபு என அழைப்பதை விட செயல்பாபு என அழைக்கும்வகையில் செயல்படுகிறார் என குறிப்பிட்டார்.

  Also Read : தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்

  சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என முதலமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்த பின் அத்துறையின் பொற்காலத்தை நாம் பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: