இந்தி டூ இங்கிலீஷ்; இங்கிலீஷ் டூ தமிழ் - மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியில் ஒரு ரணகள மொழிபெயர்ப்பு

இந்தி டூ இங்கிலீஷ்; இங்கிலீஷ் டூ தமிழ் - மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியில் ஒரு ரணகள மொழிபெயர்ப்பு
மத்திய அமைச்சர் ரமேஷ்வர்
  • News18
  • Last Updated: August 12, 2019, 4:44 PM IST
  • Share this:
மதுரையில் மத்திய உணவுத் தொழில்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் டெலி இந்தியில் பேச, தமிழில் நேரடியாக மொழிபெயர்க்க ஆள் இல்லாததால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான இரண்டாவது மாநாட்டில் மத்திய உணவுத் தொழில்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் டெலி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் இந்தியில் பேச, அதனை நேரடியாக தமிழில் மொழிபெயர்க்க ஆள் இல்லாததால், பெண் ஒருவர் அவரது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பிறகு அதனை தமிழில் மற்றொரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்தார்.


இப்படி ஒரு பேச்சு மூன்று மொழிகளை கடந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இடத்தில் சென்றடைந்தது. சமீபகாலமாக  மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தலைவர்கள் சந்திக்கும் தர்மசங்கடமான சூழல், இந்த நிகழ்ச்சியிலும் தொடர்ந்தது.

மத்திய அமைச்சரின் இந்தி உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெண் மொழிபெயர்ப்பாளர், அமைச்சரின் பேச்சு புரியாமல் சில நேரங்களில் குறுக்கிட்டு அவரிடம் பேசியதை கேட்டு அதன் பின்பு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒருவழியாக பேசி முடித்த மத்திய அமைச்சர், இறுதியில் தான் நிறைய பேச விரும்பியதாகவும் ஆனால், மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததாகவும் கூறினார்.

First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading