• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரபலங்கள் அணிந்த டிசர்ட் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்

பிரபலங்கள் அணிந்த டிசர்ட் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன், ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டுடன் யுவன் சங்கர் ராஜாவும், மெட்ரா பட நாயகன் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் இன்று ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

  • Share this:
    கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் தீவிரமாக எழுந்துவருகின்றன. சென்னை விமான நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, ‘இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா’ என்று கேள்வி எழுப்பியவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், ‘இந்தி தெரியாததால் தமிழக மருத்துவர்களை வெளியேறச் சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    ’நான் தமிழ் பேசும் இந்தியன்...’ யுவன்சங்கர் ராஜாவின் வைரல் டிசர்ட் புகைப்படம்

    இந்தநிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ‘காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.



    இந்தநிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி.சர்ட்டை அணிந்துள்ளார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ‘ஹிந்தி தெரியாது போடா..’ என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.


    இந்தநிலையில், இன்று நடிகர் சாந்தனுவும், அவருடைய மனைவி கிருத்திகாவும், ’I am a தமிழ் பேசும் indian’, ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டை அணிந்து புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில், ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: