ஹிந்தி தெரியாது... டி-சர்ட் வடிவமைத்தவர் இவர் தான்

திரைப்பிரபலங்கள் அணிந்தை அடுத்து ஒரே நாளில் மிகப்பெரும் ஹிந்தி தெரியாது போடா டிரண்ட் டீ-சர்டுக்கு தற்பொழுது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்துள்ளன.

ஹிந்தி தெரியாது... டி-சர்ட் வடிவமைத்தவர் இவர் தான்
  • Share this:
ஹிந்தி தெரியாது போடா டி-சர்ட் இணையத்தில் பிரபலமானதை தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக இதை உற்பத்தி செய்த கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஹிந்தியைத் திணித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் தமிழ் திரைப் பிரபலங்கள் ஹிந்தி தெரியாது போடா மற்றும் தமிழ் பேசும் இந்தியன் போன்ற டி-சார்ட்டுகள் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இணையத்தில்  டிரென்டானது. இந்த டி-சர்ட் கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் பலரும் இத்தகைய ஆடைகளை அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த டீசர்ட் களை தயாரித்து வழங்கியவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். இவர் திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.


இவர் கடந்த 5 ஆண்டுகளாக  பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இந்த டி-சர்ட் குறித்து பேசிய போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த டி-சர்ட் டிசைன்களை கொடுத்து ஆர்டர் வழங்கினார். முதல் கட்டமாக 1,500 டி- சர்ட்கள் தயாரித்து கொடுத்தேன். திரைப்பிரபலங்கள் அணிந்ததை அடுத்து ஒரே நாளில் மிகப்பெரும் டிரண்ட் ஆனதால் தற்பொழுது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசர்ட்களுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன.அமெரிக்கா, கத்தார் போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் திருப்பூருக்கு இதன் மூலம் அதிக ஆர்டர்கள் கிடைக்கும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading