இந்தி தெரியாதவர்கள் யோகா பயிற்சியில் இருந்து வெளியேறலாம் - ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா பேச்சு..

மாதிரி படம்

இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  யோகா ஆன்லைன் வகுப்பின் போது இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரியுள்ளனர்.

  Also read... நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - அமித் காரே  ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: