ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தி திணிப்பு.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர், இளைஞரணி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

இந்தி திணிப்பு.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர், இளைஞரணி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திமுக மாணவர் மற்றும் இளைஞரணி சார்பில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, வருகின்ற 15 ஆம் தேதி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் மற்றும் இளைஞரணி கூட்டாக அறிவித்துள்ளன.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருப்பதாக, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மேலும், இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என காட்டமாக கூறியிருந்த நிலையில்,. இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும்திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலை மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுகிறது.

  Also Read:  பணமதிப்பிழப்பு... ஒட்டுமொத்த நோட்டுகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி), மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது இந்திப் பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

  Also Read : ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி...

  மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்திப் பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுகச் சதித் திட்டமாகக் காட்சியளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டு வரும் செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளதை கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை திரும்பபெற வலியுறுத்தி,வருகின்ற 15-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, Imposing Hindi, MK Stalin, Tamil News, Udhayanidhi Stalin