புதிதாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி, ஆங்கிலத்தில் குறிப்புகள்!

விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு இந்த பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

news18
Updated: July 7, 2019, 11:10 AM IST
புதிதாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி, ஆங்கிலத்தில் குறிப்புகள்!
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிப்புகள்
news18
Updated: July 7, 2019, 11:10 AM IST
தமிழக அரசு சார்பில் புதிதாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சமீபத்தில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு இந்த பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 எனினும், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் இன்னமும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...