Home /News /tamil-nadu /

ஹிஜாப் சர்ச்சை : இளையான்குடியில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் சர்ச்சை : இளையான்குடியில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் போராட்டம்

ஹிஜாப் போராட்டம்

Hijab controversy : இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து கொண்டு, ஹிஜாப் விவகாரத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்ற வெளியிட்ட தீர்ப்பை கண்டித்து இளையான்குடியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர் 

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஹுஜாப் அணிய கூடாது என்று தீர்ப்பு அளித்ததுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது இந்த நிலையில், இந்த தீர்ப்பை கண்டித்து கர்நாடகா பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் உட்பட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ALSO READ | கல்குவாரி பெயரில் கனிமவளங்கள் கொள்ளை... புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
     

    அந்த வகையில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதை கர்நாடக பாஜக அரசு தடுப்பதாக கூறி, இளையான்குடி பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து கொண்டு, ஹிஜாப் விவகாரத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Hijab, Protest

    அடுத்த செய்தி