ஒருதலை காதலால் வெறிச்செயல்.. கல்லூரி மாணவி ரயில்முன் தள்ளிவிட்டு கொலை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலைகாதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஓடும் ரயில் முன் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.- மேலும் படிக்க
ஹிஜாப் தடை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஹிஜாப் ஆடைகளை அணிந்து வருவதற்கு தடை விதித்தது செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர். ஒற்றை நிலை எட்டப்படாத காரணத்தினால், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்திய தலைமை நீதிபதி மாற்ற உள்ளார். - மேலும் படிக்க
விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை..
வாடகைத் தாய் விவகாரம் குறித்து விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். - மேலும் படிக்க
தேவர் தங்க கவச விவகாரம்...
தேவர் தங்க கவச விவகாரம் தொடர்பாக நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர எடப்பாடி தரப்பினர் பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - மேலும் படிக்க
தீபாவளி விடுமுறை.. அரசுப்பேருந்தில் முன்பதிவு
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை ஒரு 1,10,000 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். - மேலும் படிக்க
கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்
தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது, வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ராஜா எந்த மதத்தை சேர்ந்தவர் எப்படி இருந்தர் என்பது தேவை இல்லாத சர்ச்சை எனவும் அவர் கூறியுள்ளார். - மேலும் படிக்க
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள்..
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான, சுரங்கப்பாதை கட்டுமான பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். - மேலும் படிக்க
4-வது வந்தே பாரத் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு பல நலத் திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உள்நாட்டிலேயே தயாரான அதிவேக சிறப்பு ரயிலான வந்தே பாரத் ரயிலின் நான்காவது வழித்தடச் சேவையை தொடங்கிவைத்தார். - மேலும் படிக்க
2023-ல் மகளிர் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ தீவிரம்
2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. - மேலும் படிக்க
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் மைதானங்களை மறந்துவிட்டனர்..
தடை செய்யப்பட்ட FREE FIRE, பப்ஜி உள்ளிட்ட ஆன் லைன் விளையாட்டுகளை, மீண்டும் விளையாடுவதை முற்றிலும் தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. -மேலும் படிக்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai metro, Headlines, Hijab, MK Stalin, Tamil News