முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை

முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சிபிஐ விசாரிப்பதற்கான அவசியம் இல்லை எனக்கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என கோரி திமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Also see...

First published:

Tags: Cm edappadi palanisamy, Highways Tender Case