முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நெடுஞ்சாலை டெண்டர் வழக்கு: மேல்முறையீடு செய்யபோவதாக அமைச்சர்கள் அறிவிப்பு

நெடுஞ்சாலை டெண்டர் வழக்கு: மேல்முறையீடு செய்யபோவதாக அமைச்சர்கள் அறிவிப்பு

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய உள்ளதாக, அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் அமைக்க மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினருக்கும், அவருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் வழங்கியதாக திமுக குற்றம்சாட்டியது. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு புகாரை, சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். 

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார், ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக பொன்னையன் அறிவித்தார். மேலும் முதலமைச்சரின் ரத்த சம்பந்த உறவினர்களுக்கு எந்தவித ஒப்பந்தங்களும் வழங்கப்படவில்லை என்று பொன்னையன் விளக்கம் தெரிவித்தார். புகாருக்குள்ளான நிறுவனத்துக்கு 1997-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலேயே சாலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது எந்த அடிப்படையில் என பொன்னையன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தமிழக அரசு அதை விட விலை குறைவாக நிர்ணயித்துள்ளது என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும் திமுகவினர் வேண்டும் என்றே புகார் கூறி வருவதாக தெரிவித்த மூவரும், புதிய தலைமை செயலகம் கட்டிய போது நடந்த ஊழலை எதிர்க்க திறமை இல்லாமல் தற்போது பயந்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

ALSO READ...

முதலமைச்சர் மீதான புகார் சிபிஐ-க்கு மாற்றம்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ALSO WATCH...

' isDesktop="true" id="60157" youtubeid="cj-T6JZ4pGM" category="tamil-nadu">

First published:

Tags: CBI, DMK, EPS, Highways Tender Case, Jayakumar, Ponnaiyan, RS Barathi