விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரது மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமமானது, தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இவர் முன்னாள் முதல்வர்
எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது 150 கோடி ரூபாய் வரையிலான பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகம் மற்றும் வீடுகளில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இன்று காலையில் நமது அம்மா” நாளிதழின் வெளியீட்டார் சந்திர சேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சேதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, சந்திர சேகரின் தந்தை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“நமது அம்மா” நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..
இந்த சோதனை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திர சேகர், பல்வேறு தொழில்களையும், கான்ட்ராக்ட் தொழில்களையும் செய்து வருகிறார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.