ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ் மணம் வீசும் மேகமலை சாலை வளைவுகள்... மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ் மணம் வீசும் மேகமலை சாலை வளைவுகள்... மகிழ்ச்சியில் மக்கள்!

மேகமலை

மேகமலை

மேகமலை சாலை வளைவுகளுக்கு தமிழ் மலர்கள் பெயர்களை வைத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைகிராமம். மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட இங்கு யானை, கரடி, காட்டுமாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல விலங்குகளில் வாழ்விடமாக உள்ளது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட பல மலைகிராமங்களில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆரம்ப காலம் முதல் தனியார் தோட்ட உரிமையார் கைவசம் இருந்த இந்த சாலை, நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கபட்டது. 35 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மேகமலை பகுதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 87 கோடி செலவில் சாலை வசதி செய்து தரப்பட்டது.

இதன் காரணமாக இப்பகுதிக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

34 கிமீ மலைப்பாதை வழியாகத் தான் இங்கு செல்ல முடியும். அவ்வாறு செல்லும் போது ஆபத்தான வளைவுகள் மற்றும் அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்த தான் செல்ல முடியும்.

இதில் 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் பண்டைய தமிழ் பூ பெயர்களான குறிஞ்சிப்பூ, முல்லைப்பூ, மருதம்பூ, வெட்சிப்பூ வஞ்சிப்பூ, தும்பைப் பூ, வாழைப்பூ, காந்தட்பூ, மகிழம் பூ, தாழம்பூ, பிச்சிப்பூ, குவளைப்பூ, அனிச்சம்பூ, இருவாட்சிப்பூ, கொன்றைப்பூ,

மேகமலை

வேங்கைப்பூ, மல்லிகை பூ, தாமரைப்பூ சூட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அந்தந்த வளைவுகளிலும் சூட்டப்பட்ட பூக்களின் பெயர்களை தாங்கிய பலகைகளும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளதற்கு அனைவரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கேரள மாநிலத்தை இணைக்கும் கம்பம் மெட்டு மலைப்பாதையையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு வைக்கப்பட்டது போலவே மேகமலை மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தமிழ் பூக்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இப்பகுதியில் தமிழர் பெருமையை பரைசாற்றும் விதமா தமிழ் பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பெயர்பலகைகள் நெடுஞ்சாலை துறை சார்பாக பராமரிக்கப்பட்டும் வருகிறது.

இவ்வாறு கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ் பூ பெயர்கள் வைத்துள்ளது சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்தது மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் பெருமையை போற்றும் விதமாக உள்ளது.

இக்காலத்தில் தமிழில் பேசுவதையே தவிர்த்து வரும் இந்த காலத்து குழந்தைகள் இந்த மலைப்பாதை வழியாக செல்லும் போது தமிழில் இத்தனை பூக்கள் உள்ளனவா என்று ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Theni