ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழை - வானிலை ஆய்வு மையம்!

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழை - வானிலை ஆய்வு மையம்!

மழை

மழை

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பான அறிக்கையின்படி, நடப்பு தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மில்லி மீட்டர் மழை பதிவாகியுயள்ளது.

  இது இயல்பை காட்டிலும் 45 சதவிகிதம் அதிகம் ஆகும். வழக்கத்தை காட்டிலும் 11 மாவட்டங்களில் மிக அதிக மழையும் , 16 மாவட்டங்களில் அதிக மழையும் பொழிந்துள்ளது.

  இதனிடையே, ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

  சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  இதையும் வாசிக்க: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

  தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை பகுதிகள், தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Heavy Rainfall, Indian meteorological department, Tamilnadu