தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்... ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூல்

தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்... ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூல்
  • News18
  • Last Updated: October 26, 2019, 9:28 AM IST
  • Share this:
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளோர் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்து 56 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதனால் பலசாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர். சென்னை வாசிகளும் தீபாவளி ஷாப்பிங்குக்கு குவிந்தததால் முக்கிய சாலைகள் நெரிசலால் திக்குமுக்காடின.

தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக, சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்து 646 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும் பயண நேரம், வசதி கருதி பலரும் தனியார் பேருந்துகளை விரும்புகின்றனர். ஆனால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்து நிறுவனங்கள், மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில் கோயம்பேடு பேருந்துநிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கின்றனவா என விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு தரப்பில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் அதை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்காணோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதால் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல்களால் திணறின. இதனிடையே அதிக கட்டண வசூல் காரணமாக 6 பேருந்துகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன் சொந்த ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் அனைவரும் பேருந்து நிலையம் நோக்கி கடந்த 2 நாட்களாக குவிந்து வரும் நிலையில் இன்று மேலும் கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Also watch

First published: October 26, 2019, 9:28 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading