ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொறியியல் கல்லூரிகளுக்கு இரு மொழிக் கொள்கையே போதும் : அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளுக்கு இரு மொழிக் கொள்கையே போதும் : அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

1965-ம் ஆண்டு ஆறாக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 500-க்கும் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கு இரு மொழிக் கொள்கையே போதும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்திய பொறியியல் கல்லூரிகள் மற்றும் இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

 

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு ஆறாக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 500-க்கும் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி இருக்க வேண்டும் எனவும், பாடத்திட்டங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அனைத்து துறைகளிலும் பொறியாளர்களின் தேவை அதிகம் உள்ளதாக கூறிய அமைச்சர், பொறியாளர் கண்டுபிடித்த பொருட்கள் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

First published:

Tags: Engineering, Minister Ponmudi