மது அருந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை

விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இடத்திற்கு சென்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும்.

Web Desk | news18-tamil
Updated: August 13, 2019, 5:31 PM IST
மது அருந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
Web Desk | news18-tamil
Updated: August 13, 2019, 5:31 PM IST
மது அருந்தி கல்லூரிக்கு சென்று சஸ்பெண்டனான மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்று உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம் மாணவர்களு்கு நூதன தண்டனையும் வழங்கி உள்ளது.

மது அருந்தி விட்டு கல்லூரிக்கு வந்ததால் மாணவர்கள் 8 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தனர். இதனை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காது, அதே கல்லூரியில் எங்களை இறுதி ஆண்டில் சேர்த்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.இறுதி ஆண்டில் மட்டும் பிற கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பது கடினம். ஆகவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் மீண்டும் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், மாணவர்கள் வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இடத்திற்கு சென்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மது அருந்த மாட்டோம் என விழிப்புணர்வு எடுக்க வேண்டுமென்ற நூதன தண்டனையை அளித்துள்ளனர்.

Also Watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...