Home /News /tamil-nadu /

நீதிமன்ற அவமதிப்பிற்காக பெண் தாசில்தாருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை..

நீதிமன்ற அவமதிப்பிற்காக பெண் தாசில்தாருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை..

 நீதிமன்றம்

நீதிமன்றம்

Tahsildar Punished : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பெண் தாசில்தார் லலிதா, நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மாலை வரை அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி முருகன் தரப்பில் 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாரை குற்றவாளி என அறிவித்தது. மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக சம்பந்தப்பட்ட தாசில்தாரை நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்திருந்தார்.

அதன்படி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பெண் தாசில்தார் லலிதா, நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், ஆக்கிரமிப்பை மூன்று வாரங்களில் அகற்றுவதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள்
பெண் தாசில்தாரருக்கு கடுமையான தண்டனை விதிக்காமல் இன்று மாலை நீதிமன்ற நேரம் முடியும் வரை அவரை நீதிமன்றத்தில் இருக்கும்படி நூதன தண்டனையை வழங்கி உத்தரவிட்டனர்.
Published by:Raj Kumar
First published:

Tags: Chennai High court, Tiruvanamalai

அடுத்த செய்தி