மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் திறக்கப்படுமா? - இன்று விசாரணைக்கு வருகிறது வழக்கு..!

அனுமதியற்ற குடிநீர் ஆலைகளை சீல் வைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் திறக்கப்படுமா? - இன்று விசாரணைக்கு வருகிறது வழக்கு..!
கோப்புப் படம்
  • Share this:
கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் 7-ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்க அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7-வது நாளாக இன்றும் தொடரும் இந்த வேலைநிறுத்தத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேன் குடிநீர் விலை முன்பைவிட 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், நாளொன்றுக்கு 300 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர், சமையல் தேவைகளுக்காக கேன் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும், விநியோகிக்க தண்ணீர் இல்லை என முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கேன் குடிநீர் கிடைக்காமல், கடைகளுக்கு சென்று அங்குள்ளோரிடம் வாக்குவாதம் செய்யும் அளவிற்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்ட 111 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.இதனிடையே, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு என குடிநீர் ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயக்குவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Also see...

 
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading