வேதா நிலையம் தொடர்பாக அதிமுக மேல் முறையீடு தொடர்ந்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது, என்றும் மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் வேதா இல்லத்தின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.தீபா மற்றும் தீபக் இடம் ஒப்படைத்தார். இதனையடுத்து இருவரும் வேதா இல்லத்திற்கு வருகை தந்து கோட்டாச்சியர், வட்டாச்சியர் முன்னிலையில் உள்ளே சென்று வீட்டிற்குள் அனைத்து அறைகளையும் 3 மணி நேரமாக பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, ஜெயலலிதா மறைந்த பின்னர் இன்று தான் இங்கு வந்துள்ளேன். ஜெயலலிதா இறந்த அன்று வீட்டிற்குள் என்னால் செல்ல முடியவில்லை. வாசலில் தான் நின்றேன். முன்பை விட வேதா நிலைய வீடு தற்போது மிகவும் மாறியுள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களில் நிறைய பொருட்கள் இல்லை.
ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவும் இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில் தற்போது இல்லை. வீடு காலியாகவே உள்ளதாகவும் அவர் அறையில் எந்த பொருட்களும் இல்லை என்றார்.
மேலும் பேசிய அவர், ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளதாகவும், ஆனால் இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை என கூறினார். இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஆனால் இந்த வீட்டிற்கு பாரமரிப்பு பணிகள் நிறைய உள்ளது. அதை எல்லாம் செய்ய வேண்டும் என்றார்.
அதிமுக சார்பில் வேதா நிலையம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும், இந்த வீட்டை அரசுடமையாக்கினால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும். இந்த வீட்டை பார்த்தாலே எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது அவரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறிய அவர், மரணம் தொடர்பான விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவிடம் நெருங்க விடாமல் எங்களை தடுத்தவர் சசிகலா. இந்த சொத்து விவாகரம் தொடர்பாக சசிகலாவிடம் இருந்து எங்களிடம் எந்த தொந்தரவும் வரவில்லை என்று தெரிவித்த அவர், தொடர்ந்து வேதா இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Also read: வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது.. வேதா இல்லம் சிக்கல் குறித்து ஜெ.தீபா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: J Deepa, Jayalalitha, Poes Garden, Vedha House