Home /News /tamil-nadu /

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்....சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு, பாா்வையாளா்களுக்கு தடை

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்....சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு, பாா்வையாளா்களுக்கு தடை

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உஷார் நிலையில் இருக்கும்படி எச்சரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உஷார் நிலையில் இருக்கும்படி எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதணைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. இதனால் பாா்வையாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பார்வையாளர் அனுமதிச்சீட்டு வினியோகத்தை நிறுத்திவைக்கவும் ஏழு அடுக்கு பாதுகாப்பு தொடரும் என்றும் விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இன்று அதிகாலை இருந்து அமுலுக்கு வந்துள்ளது

Also watch

Published by:Prabhu Venkat
First published:

Tags: Chennai Airport

அடுத்த செய்தி