Tamil Nadu Lockdown : தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை

ஊரடங்கு கட்டுப்பாடு

தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனையின் போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

  • Share this:
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.

பின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ஆம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 17,321 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தினசரி 400க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகின்றது. அதன்படி, ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Must Read : புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அதன்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே சில தளர்வுகள் கடந்த ஊரடங்கு நீட்டிப்பு இப்போது அறிவிக்கப்பட்டது. அதில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்  குறைந்த பட்ச தளர்வுகளும், எஞ்சியிருக்கும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ள இந்நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.
Published by:Suresh V
First published: