ஆப் மூலம் கட்டிய பணத்திற்கு நாள்தோறும் அதிக வட்டி.. புதிய வகை நூதன மோசடி!!

ஆப் மூலம் கட்டிய பணத்திற்கு நாள்தோரும் அதிக வட்டி.. புதிய வகை நூதன மோசடி!!

ஆரம்பத்தில் கட்டிய சிறிய தொகைக்கு பணம் கிடைத்து வந்துள்ளது, அதை நம்பிய பாபு ஐந்து லட்சம் வரை பணத்தை கட்டியுள்ளார்.

  • Share this:
    சென்னையில் கட்டிய பணத்திற்கு நாள்தோறும் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறி புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. யாருக்கு பணம் கட்டுகிறோம் என்று தெரியாமல் ஆப் மூலமாக பணத்தை கட்டியவர்கள் தற்போது காவல்துறையை நாடியுள்ளனர்.

    புதிய வகை மோசடி அரங்கேற்றப்படுவது எப்படி?

    ஃபார்ஷூன் ட்ரசர் என்ற ஆப் மூலமாக கட்டும் பணத்திற்கு நாள்தோறும் அதிகவட்டி கிடைக்கும் என்ற புதிய விளம்பரத்தை நம்பி பலர் லட்சங்களை இழந்துள்ளனர்.

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 41 வயதான பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் முருகேசன் என்பவர் பாபுவிடம் ஃபார்ஷூன் ட்ரசர் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    ஆப்பில் பணம் கட்டினால் கட்டிய பணம் ஒரு குறுப்பிட்ட காலத்தில் திரும்ப கிடைத்துவிடும் என்றும் செலுத்திய தொகைக்கு நாள்தோறும் ஏழு சதவீதம் வட்டியும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

    Also read: மதுகொடுத்து பள்ளி மாணவிகள் மீது பாலியல் வன்முறை... சிக்குவாரா சிவசங்கர் பாபா?

    அத்துடன் தெரிந்த நண்பரைகளை அந்த ஆப்பில் பணம் கட்ட சேர்த்து விடுவதன் மூலம் சேர்த்து விடும் நபருக்கு 10 சதவீதம் கூடுதல் தொகையும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

    நாள்தோறும் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் பாபுவும் அந்த ஆப்பில் பணத்தை கட்டியுள்ளார். ஆரம்பத்தில் கட்டிய சிறிய தொகைக்கு பணம் கிடைத்து வந்துள்ளது, அதை நம்பிய பாபு ஐந்து லட்சம் வரை பணத்தை கட்டியுள்ளார். மேலும் தனக்கு தெரிந்த நண்பர்களையும் அந்த திட்டத்தில் சேர்த்துவிட்டுள்ளார்.

    ஒரு மாதம் மட்டும் கட்டிய தொகைக்கு வட்டி வந்த நிலையில் திடீரென பணம் வருவது நின்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அத்துடன் அந்த ஆப்பும் செயல்படாமல் போய்யுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு தனது நண்பர் முருகேசனிடம் இது பற்றி கேட்டுள்ளார் . ஆனால் முருகேசனும் தனக்கு வரவேண்டிய தொகையும் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இப்படி இந்த ஆப்பில் மூலமாக பணத்தை கட்டி இழந்த 200 க்கும் மேற்பட்டோர் தற்போது தங்கள் பணத்தை மீட்டு தரக்கோரி சென்னையின் அடையாறு, பரங்கிமலை உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

    எந்த நிறுவனம் குறுப்பிட்ட ஆப்பை இயக்கி வருகின்றது போன்ற எந்த தகவலையும் பெறாமல் ஆசை வார்த்தைக்கு மட்டும் மயங்கி பணத்தை கட்டியவர்கள் தப்போது காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

    எந்த அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமும் இப்படி கட்டிய பணத்திற்கு அதிக வட்டியை கொடுக்க முடியாது என்று சொல்லும் வல்லுநர்கள் இது போன்று ஆசைகாட்டி வரும் விளம்பரங்களை தவிர்க்க அறிவுறுத்துகின்றனர்

    கொரோனா நேரத்தில் ஏற்கனவே பண தட்டுப்பாட்டில் உள்ள மக்கள் எதோ வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் செய்த முதலீடு மொத்தமும் மோசமாக போனது பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: