ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கார்த்திக் கோபிநாத்

கார்த்திக் கோபிநாத்

கோவில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ்  மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில்  கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு; வெள்ளை அறிக்கை வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம்  கேட்டுள்ளதாகவும் இன்னும் வழங்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போதுமான அவகாசம் அளித்தும் காவல்துறை ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்பதால் முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.

மேலும் வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

First published:

Tags: Chennai High court, Madras High court