• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும் - நீதிமன்றம் கருத்து

உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும் - நீதிமன்றம் கருத்து

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதற்கு தேர்தல் பிரசாரமும் ஒரு காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதற்கு தேர்தல் பிரசாரமும் ஒரு காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருக்கும் மாநகராட்சி, நகராட்சிகளுக்குக்கான உள்ளாட்சித்தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித்தேர்தலை நடத்தினால் மூன்றாவது அலை வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்தனர். தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு விசாரிக்கலாம் என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

    தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீதிமன்ற தலையீட்டின் காரணமாக, 3 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

    Must Read : அப்துல் கலாமை பின்பற்றி பயணிக்கிறார் குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

    உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

    இந்நிலையில், ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவைபடுவதால் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன் வடிவை தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: