Home /News /tamil-nadu /

அர்ச்சகர்கள் நியமனம்: தமிழக அரசின் விதிகள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அர்ச்சகர்கள் நியமனம்: தமிழக அரசின் விதிகள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையில் புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

    வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும், அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

    அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றியே கோயில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாகவும், அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

    Must Read : தன்னை வளர்த்த பெண்மணியின் உயிரைக் காப்பாற்றி ‘சூப்பர் ஹீரோவாக’ மாறிய பூனை! 

    ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை முடித்து வைத்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, Hindu Temple, TN Govt

    அடுத்த செய்தி