Home /News /tamil-nadu /

பண மதிப்பிழப்பு செய்த பணத்தில் சொத்து.. சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செல்லும் - உயர் நீதிமன்றம்

பண மதிப்பிழப்பு செய்த பணத்தில் சொத்து.. சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செல்லும் - உயர் நீதிமன்றம்

சசிகலா

சசிகலா

Sasikala : பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தில் 1,600 கோடி ரூபாய் மதிப்புக்கு, பல்வேறு சொத்துக்கள் சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்டது வருமானவரித்துறை சோதனையில் தெரியவந்தது,

    பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் மூலம் சொத்துக்களை வாங்க, வி.கே.சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    2017 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,600 கோடி ரூபாய் மதிப்புக்கு, பல்வேறு சொத்துக்கள் சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்டதாக, அதில் தொடர்புடையவர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களின் சொத்துகளையும் வருமானவரித்துறை முடக்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து கங்கா பவுண்டேஷன், ஸ்பெக்ட்ரம் மால், மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    Must Read : அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?... ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு 25ம் தேதி ஆஜராக வருவாய்துறை நோட்டீஸ்

    அப்போது, வி.கே.சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகள் செல்லும் எனக் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, Property, Sasikala

    அடுத்த செய்தி