Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ADMK : ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 23ம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், ஜூலை 11ஆம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    Must Read : உள்ளாட்சி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு.. சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டி

    ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, OPS

    அடுத்த செய்தி