• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த சொல்கிறார்: ஆனால், இந்தியை கட்டாயப்படுத்துகின்றனர் - உயர் நீதிமன்றம் காட்டம்

பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த சொல்கிறார்: ஆனால், இந்தியை கட்டாயப்படுத்துகின்றனர் - உயர் நீதிமன்றம் காட்டம்

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

பிரதமர், தாய் மொழியைக் கற்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால், இந்தி, ஆங்கிலத்தை கட்டாயப்படுத்துகின்றனர் என்று உயர் நீதிமன்றம் மதுரைகிளை கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் எனவும் மத்திய அரசு விதிகளை உருவாக்கியது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இருப்பினும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தாய் மொழி, தமிழ் மொழியை படிப்பது அடிப்படை உரிமை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் என ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. மொழியால் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க கூடாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் வந்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார் பிரதமர்; ஆனால் இந்தி, ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர்.


    தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா?’ என்று காட்டமாக கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: