நீட் ஆள்மாறாட்ட விவகாரம்! சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்! சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசு அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடைபெற்றிருக்காது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர்கள் உதித் சூர்யா, ராகுல், பிரவீன் ஆகியோரும், அவர்களது தந்தைகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் மீதும் ஆள்மாறாட்டப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவரும் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

  அவரைத் தொடர்ந்து அவரது தந்தை போலி மருத்துவர் முகமது சபியையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  இந்தநிலையில், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் நீதிபதிகள் சராமாரியாக கேள்வி எழுப்பினர்.

  விசாரணையின்போது, ‘நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஒரே ஒரு இடைத் தரகருக்கு மட்டும்தான் தொடர்பு உள்ளது நம்பும்படியாக இல்லை. இதில், எத்தனை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு பணம் கை மாறியது’ என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். இதுதொடர்பாக, அக்டோபர் 15-ம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: