கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது
அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் ராமராஜன்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் 2016 மே 18ம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ராமராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புகார் கொடுத்த பொது ஊழியரிடமிருந்து எந்த ஆதாரங்களும் கேட்காமல் வழக்கை விசாரணைக்கு ஏற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதித்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் அனுமதியளித்துள்ளதாகவும், தென்னிலை நாலு ரோடு சந்திப்பு தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை மாஜிஸ்திரேட் கவனிக்க தவறிவிட்டார் என்றும் ராமராஜன் தரப்பில் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ராமராஜன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.