பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து அனைத்து தரப்பு ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை மறைக்காமல், அப்படியே வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக வாரம் இருமுறை வெளியாகும் தனியார் பத்திரிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பகிரங்கமாக பொது வெளியில் அம்பலப்படுத்தப்பட்டதாகவும் அந்த பிரதிகளை பறிமுதல் செய்ய உத்தரவு வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபானி, குறிப்பிட்ட அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்களை சென்று விட்ட நிலையில், பிரதிகளை திரும்ப பெறுவது பயனற்றது என தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: மதுபோதையில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்; சென்னையில் பரபரப்பு
இருப்பினும் இந்த வழக்கில் அந்த தனியார் பத்திரிகையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரை பத்திரிகை அல்லது காட்சி ஊடகங்களில், முகம் மற்றும் அடையாளங்களை மறைத்து கூட செய்தி வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவை மீறும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Female victims, Mass Media, Pollachi, Pollachi sexual harassment