பேனர்: இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும்? - நீதிமன்றம் கண்டனம்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி ஆளும் கட்சியின் கொடி வைக்க யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

news18
Updated: September 13, 2019, 2:48 PM IST
பேனர்: இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும்? - நீதிமன்றம் கண்டனம்
Breaking
news18
Updated: September 13, 2019, 2:48 PM IST
கடற்கரை சாலையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும்  உடனே அகற்ற வேண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், சுபஸ்ரீ'யின் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு அவர் பெற்றோர் மட்டுமல்ல சமுதாயத்தின் பங்கும் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாட்டில் பொதுமக்களின் உயிருக்கு 1 சதவீத மதிப்பு கூட இல்லை. அரசியல் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் மட்டும் தான் விருந்தினர்கள் வருவார்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி ஆளும் கட்சியின் கொடி வைக்க யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

Loading...

பேனர் வைக்க கூடாது கட்சியினருக்கு என திமுக கட்சி தலைவர் கூட ஏன் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கிறார் என்று திமுக வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறு ஒரு வேளை தெரிவித்து இருந்தாலும் அதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை எனவும்  நீதிபதிகள் கூறினர்.

அதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையிம் உடனே அகற்ற வேண்டும் என்று அரசிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...