மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு - கருணாநிதியின் மகள் செல்வி பதிலளிக்க உத்தரவு!

மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு - கருணாநிதியின் மகள் செல்வி பதிலளிக்க உத்தரவு!
மு.க.செல்வி
  • News18
  • Last Updated: September 23, 2019, 1:03 PM IST
  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்கு எதிரான மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க செல்வி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியின் மகள் செல்வி, தனக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் தாளம்பூர் கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்தை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவருக்கு 5.14 கோடி ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டு, 3.50 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளார்.

பின்னர் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். முன்பணத்தை திருப்பிக் கேட்ட நெடுமாறனை, தாக்கி, மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளிக்கபட்டது.


இதுசம்பந்தமாக நெடுமாறன் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது  சென்னை மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், செல்விக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதன்படி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி மனு தாக்கல் செய்தும் அதன் மீது எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.மேலும், குற்றம் சாட்டபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் விசாரணையை ஆலந்தூர் நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அதுவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பூந்தமல்லி நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, செல்வி மற்றும் ஜோதிமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Also see...

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading