Home /News /tamil-nadu /

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்... கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்... கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

  • News18
  • Last Updated :
    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதானவர்களின் மீதான குண்டர் சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி