ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தி.மு.க பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தி.மு.க பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக பேச்சாளர் சைதை சாதிக்

திமுக பேச்சாளர் சைதை சாதிக்

பாஜகவைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜகவைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்தது தொடர்பான வழக்கில் மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த நடிகைள் குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோரை திமுக பேச்சாளர் சைதை சாதிக், ஆபாசமாக பேசியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் பற்றி இனி அப்படி பேச மாட்டேன் என நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை சாதிக்கை கைது செய்ய கூடாது என அறிவுறுத்தினார்.

First published:

Tags: BJP, DMK, HighCourt