தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

அபராதத்தை எதிர்த்து பொதுபணித்துறை சாப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 11:28 AM IST
தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
உயர் நீதிமன்றம்
Web Desk | news18
Updated: July 12, 2019, 11:28 AM IST
சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும்  பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

மேலும் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

மேலும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று இறுதி விசாரணை நடத்தது. அப்போது  நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால், ரூ.100 கோடி அபராதம் செலுத்தும் நிலைக்கு தமிழக அரசு உள்ளாகியுள்ளது.

மேலும் படிக்க... 2019-ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் - ஒரு பார்வை






அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...