தமிழகத்தில் உரிமம் பெற்ற செங்கல்சூளைகள் மட்டும் செயல்படுவதை உறுதிபடுத்துக - உயர் நீதிமன்றம்

மாதிரி படம்

தமிழகத்தில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக  செயல்படும் செங்கற்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயகணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .

  அப்போது ,சட்டவிரோதமாக  செங்கற்சூளைகள் செயல்படுவதாக கூறும் இடத்தை கனிமவளத் துறை கூடுதல் இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளதாகவும், அவருடைய அறிக்கைக்காக காத்திருப்பதாக தமிழக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமீப காலங்களில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்து வருவதாகவும், இதை மாநில அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், செங்கற்சூளைகளுக்கு உரிமம் வழங்க வேண்டிய வழிமுறைகள் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கனிமவள கூடுதல் இயக்குனர் தாக்கல் செய்யும் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
  Published by:Karthick S
  First published: