அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் வசூலிப்பது தொடர்பாக வழக்கு: தினகரன் பதிலளிக்க உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் வசூலிப்பது தொடர்பாக வழக்கு: தினகரன் பதிலளிக்க உத்தரவு
டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.
  • Share this:
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரனுக்கு விதிக்கப்பட்ட 31 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கப் பிரிவு மற்றும் டிடிவி தினகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நிய செலாவணி மோசடி செய்ததாக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 1998ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.


இந்த, அபராதத் தொகையை வசூலிக்க அமலாக்கப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அபராதத் தொகையை வசூலிக்க அமலாக்கப் பிரிவு கடந்த 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளாதால், அபராதத் தொகையை வசூலிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்க பிரிவுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading