ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தோல்வியால் இருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரகுவரனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மும்பையைச் சேர்ந்த கேம்ஸ் 24*7 என்கிற நிறுவனத்திடம் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் வழங்கப்பட்ட போனஸ், சம்பாதித்த தொகை, வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை வழங்கும் படி சிபிசிஐடி கடந்த மாதம் 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த இரண்டு நோட்டீஸ்களையும் ரத்து செய்யக்கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், இதுவரை நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஏராளமான ஆவணங்கள் உள்ளதால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விரைவில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சேதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online rummy