கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையை காக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையை காக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
  • News18
  • Last Updated: December 2, 2019, 12:23 PM IST
  • Share this:
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் மரங்களை வெட்டுவதை தவிர்க்கும் வகையில் மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடங்களை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை டிசம்பர் 4-ம் தேதி தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது.

மரங்கள் வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்துவமனை வளாகத்தில் 25 மரங்கள் மட்டும்தான் அகற்றப்பட இருப்பதாகவும், மாற்று இடத்தில் நட இருப்பதாகவும் கூறி புகைப்பட ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் பழமையான மரங்களை ஓரிடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்தில் நடுவதால் அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மரங்களை வெட்டாமல், வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.விசாரணையின் போது, மீண்டும் ஒரு டெல்லியாக சென்னை மாறிவிட விரும்பவில்லை என்றும், கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடுகளை காக்க வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Also see...
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading