Home /News /tamil-nadu /

இதுபோன்ற செயலை ஏற்க முடியாது: ட்விட்டர் பதிவு குறித்து எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இதுபோன்ற செயலை ஏற்க முடியாது: ட்விட்டர் பதிவு குறித்து எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

சமூக வலைத்தளங்களில் வரும் அருவருக்கத்தக்க கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பல முறை ரீ-டிவீட் செய்த நடிகர் எஸ்.வி.சேகரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழும்பியது. பின்னர் இதுதொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தவறான கருத்துக்களை, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் செய்தியாளர் மிதார் மொய்தீன் அளித்த புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்தவை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.

தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்த போது புகார்தாரர் சார்பில், கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி.சேகர்  சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் மறுபதிவு (Re Tweet) செய்து, பின்னர் அதனை நீக்கியதற்கான ஆதாரங்கள்  நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது - தமிழக அரசுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் கோரிக்கை

அப்பொழுது நீதிபதி, மற்ற பதிவுகளை கூட அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம், ஆனால் இதுபோன்று அருவருக்கத்தக்க கருத்துக்களை மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தார். சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது எனவும் நடிகர் எஸ் வி.சேகர்  இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு வழக்கு விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Published by:Karthick S
First published:

Tags: Chennai High court

அடுத்த செய்தி