கார்த்தி சிதம்பரம் தரப்பில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தம்மிடம் உள்ள பாஸ்போர்ட்டின் பக்கங்கள் முடிந்த நிலையில் கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கு விண்ணபித்ததாகவும், கூடுதல் பக்கங்களை இணைத்து பாஸ்போர்ட் வழங்கிய போது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் கால அவகாசத்தை குறைத்து வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. பத்தாண்டுகள் செல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், 2010ம் ஆண்டிலிருந்து பாஸ்போர்ட் மறுமுறை வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரே வழிமுறையே பின்பற்றப்படுவதாகவும் மேலும் ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட் பக்கத்துடன் கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கு வழிமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் பக்கம் முடிவடைந்தால் புதிய பாஸ்போர்ட் எண்ணுடன் புதிய பாஸ்போர்ட் தான் வழங்கப்படும் எனவும் எனவே இந்த சூழலில் பழைய பாஸ்போர்ட் செல்லும் காலத்தை கணக்கில் கொள்ளாமல் புதிய பாஸ்போர்ட்டின் காலம் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், எந்தவித உரிய காரணங்களும் சொல்லாமல், இயற்கை நீதிக்கு எதிரான பாஸ்போர்ட் அலுவலகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் முடிவு செய்யட்டும்: அதன்பிறகு பதில்சொல்கிறேன்- டி.டி.வி.தினகரன் விளக்கம்
எனவே, ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்க்கு இருந்த கால அவகாசம் அல்லது பத்தாண்டு காலத்திற்கு செல்லக்கூடிய வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.