ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதின மடங்கள் சேவை நோக்கில் செயல்படுகின்றனவா? வியாபார நிறுவனங்களாக செயல்படுகின்றனா? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

ஆதின மடங்கள் சேவை நோக்கில் செயல்படுகின்றனவா? வியாபார நிறுவனங்களாக செயல்படுகின்றனா? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை ஆதினம்

மதுரை ஆதினம்

மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக ஆதினம் எதன் அடிப்படையில் தனி நபர்களுக்கு பவர் அதிகாரம் கொடுக்கலாம் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

ஆதின மடங்கள் சேவை நோக்கில் செயல்படுகிறதா  இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆதின மடங்கள் தவறு செய்யும்போது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு என்றும்  தெரிவித்துள்ளது.

மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான மடமாக  இருந்து வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம்  தரப்பில்  சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள  1100 ஏக்கர் நிலங்களை  பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு பவர் அதிகாரம் கொடுத்து,  பதிவு செய்து உள்ளார்.

இந்த பவர் அதிகாரத்தை வைத்து, 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது சட்டவிரோதமானது எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை , பத்திர பதிவை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம்   கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் R. மகாதேவன்,  J.சத்திய நாராயண பிரசாத் அமர்வில்   விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மதுரை ஆதின மடத்தின் சொத்துகள் தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பினர். ஆதினமடங்கள் சேவை நோக்கில் செயல்படுகிறதா? இல்லை வியாபாரநிறுவனங்களாக செயல்படுகிறதா என்று வினா எழுப்பினர்.

மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக ஆதினம் எதன் அடிப்படையில் தனி நபர்களுக்கு பவர் அதிகாரம் கொடுக்கலாம் என்றும் ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறை கண்காணிப்பில் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ளது.  ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில்  குழு அமைத்து, அங்குள்ள மதுரை ஆதின மடத்தின் சொத்துகள் குறித்து உரிய  விசாரணை நடத்தி  பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28 ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Madurai Adhinam, Madurai High Court