முன்னாள் அமைச்சரின் மருமகன் வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சரின் மருமகன் வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் காமராஜ்

பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகனும் பிரபல வழக்கறிஞருமான காமராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியுருப்பில் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

  திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் காமராஜின் மூத்த சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மொத்தமுள்ள 34 சாட்சிகளில் இதுவரை 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: