Home /News /tamil-nadu /

பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி

பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு

நாம் தமிழர் கட்சியின் பொன்னமராவதி தொகுதி பொறுப்பாளர் மேலைச்சிவபுரி முத்துராமன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டலின், மறைந்த திமுக தலைவர் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான புகாரில் அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என கண்டனம் தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் பொன்னமராவதி தொகுதி பொறுப்பாளர் மேலைச்சிவபுரி முத்துராமன். இவர் கடந்த அக்டோபர் 24ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசினார்.

    அவரது பேச்சை சமூக வலைதளத்தில்பலரும் பகிர்ந்த சூழலில், திமுகவின் திருமயம் தொகுதி சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளரான ஆலவயல் முரளி சுப்பையா, பொன்னமராவதி காவல் நிலையத்தில் முத்துராமன் மீது புகார் அளித்தார். புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து, தலைமறைவான முத்துராமன், தனக்கு முன் ஜாமீன் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  மனு செய்திருந்தார்.  எனினும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,  முத்துராமனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி முத்துராமன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

    இதையும் படிங்க: விவசாயத்துக்கு ரூ.123 லட்சம் கோடியா? மொத்த பட்ஜெட்டே ரூ.34 லட்சம் கோடிதான்... சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்


    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும்,  இது போன்று இனிமேல் பொது இடங்களில் அவதூறாக பேச மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai High Court, MK Stalin

    அடுத்த செய்தி