Home /News /tamil-nadu /

அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகளை விற்கப்படும் என கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வினஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி, குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநாகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனால், விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும், குடியிருப்பு வாசிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சஃபீக் அமர்வு, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டி விட்டு பின் அதனை வரைமுறைப்படுத்த கோருவதை ஊக்குவிக்க கூடாது எனவும், அதை அனுமதித்தால் அனுமதியை மீறி கட்டுமானங்களை கட்டி விட்டு பின் அதை சரிசெய்து கொள்ளலாம் என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகளை விற்கப்படும் என கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கட்டிட பணி முடிப்பு சான்று வழங்கும் முன் நேரில் ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டறிந்தால் கட்டிட பணி முடிப்பு சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Also Read : குடும்ப சண்டையால் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு... சொத்து பிரச்சனை பின்னணி என்ன?

மேலும், விதிமீறல்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காவிட்டால் விதிமீறல்கள் தெரியாமல் வங்கிக் கடன் பெற்று வீடு வாங்கியவர்களுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பது சிரமம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் குடியிருப்பு வாசிகளுக்கு கட்டுமான நிறுவனம் மாற்று இடம் வழங்கி, கட்டிடத்தை ஆறு வாரங்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அதன் பின் இரு வாரங்களில் கட்டிடத்தை இடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி